எங்களை பற்றி
தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாறு
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் என்பது 1928 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க தெங்கு ஆராய்ச்சி கட்டளைச் சட்டத்தின் கீழ் தென்னை ஆராய்ச்சி திட்டமாக 1929 இல் நிறுவப்பட்ட ஒரு தேசிய நிறுவனமாகும். இத்திட்டம் தனது தலைமையகத்தினை லுணுவில (வட மேல் மாகாணம்) பண்டிரிப்புவ தோட்டத்தில் ஸ்தாபித்ததுடன் தெங்கு பயிர்ச்செய்கை தொடர்பான தொழினுட்ப தகவல்களை தென்னை செய்கையாளர்களுக்கு உதவுவதற்காக பிறப்புரிமையியல், இரசாயனவியல் மற்றும் மண் இரசாயனவியல் ஆகிய மூன்று தொழினுட்ப பிரிவுகளுடன் தனது ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஆரம்பித்தது. 1950 ஆம் ஆண்டு 37 ம் இலக்க தெங்கு ஆராய்ச்சி சட்டத்தினை தொடர்ந்து இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இலங்கையின் தென்னை தொடர்பான அனைத்து விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் இங்கு மையப்படுத்தப்பட்டன. தென்னை ஆராய்ச்சியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. 1971 ம் ஆண்டு வெளியிடப்பட்ட 46 ம் இலக்க தெங்கு அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் முகாமைத்துவ சபையாக செயற்படும் பொருட்டு தென்னை ஆராய்ச்சி சபை 1972 இல் நிறுவப்பட்டது. தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சின் கீழ் அரை தன்னாட்சி உடைய ஆராய்ச்சி நிறுவனமாகும்.
தவிசாளரின் செய்தி
பணிப்பாளரின் செய்தி
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தென்னை பயிர்ச்செய்கை மற்றும் பதனீடு சம்பந்தமான தொழினுட்பங்களை விருத்தி செய்வதற்கும் பரப்புவதற்குமான மையப் புள்ளியாக விளங்குகிறது. தெங்கு உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி உலகளவில் அதிகரித்திருக்கும் அதேசமயம் புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம், குறைந்த அளவிலான மண் வளம், குறைந்த உற்பத்தியினை கொண்ட பெருந்தோட்டங்கள், பீடை மற்றும் நோய்களின் அதிகமான நிகழ்வுகள், விளைச்சல் மற்றும் பண்ணை விலைகளின் தளம்பல், உயர்ந்த உற்பத்தி செலவு, உற்பத்தி கொண்ட தென்னை நிலங்கள் துண்டாடப்படுதல், தொழிற்துறைக்கான மூலப் பொருள்களின் பற்றாக்குறை மற்றும் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியன தொழிற்துறையினால் எதிர்கொள்ளப்படுகின்ற பல தனித்துவமான சவால்களாகும். இவ்வாறான சவால்கள் காணப்பட்ட போதிலும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 92 வருடங்களாக தென்னையின் உற்பத்தி, பாதுகாப்பு, பெறுமதி சேர்ப்பு அம்சங்களுக்கு பல நிபுணத்துவ தீர்வுகளை வழங்கி வருகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளை குறிப்பிடுகின்ற தென்னை இனவிருத்தி, இழைய வளர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் அதற்கான பின்பற்றல்கள், சிறந்த பயிராக்கவியல் நடவடிக்கைகள், விளைச்சலின் எதிர்வுகூறல் மற்றும் மதிப்பீடு, பீடை மற்றும் நோய் முகாமைத்துவம், பெறுமதி சேர்ப்பு, தென்னையின் ஆராக்கிய நன்மைகள், பெறுமதி தொடர் பகுப்பாய்வு மற்றும் கொள்கை பரிந்துரைகள் என்பனவற்றை கருத்தில் கொள்ளக்கூடியதுமான ஒரு பரந்த அளவிலான ஆராய்ச்சி செயற்றிட்டம் மற்றும் உயர் தரமான நடுகை பொருட்களை உற்பத்தி செய்கின்ற விதைத் தோட்டங்களை பராமரித்தல், பராம்பரியமற்ற பிரதேசங்களின் நிலங்களின் தென்னைக்கான பொருத்தப்பாட்டினை கணித்தல் மற்றும் தெங்கு தொடர்பில் அக்கறையுடையோருக்கு தொழினுட்பத்தை பரப்புதல் ஆகியனவற்றை பிரதானமாக கொண்டதுமான அபிவிருத்தி செயற்றிட்டம் ஆகியவற்றுக்கான பாதையொன்றினை அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கவுள்ளது. தெங்குத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தேவையினை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக நல்ல உபகரணங்கள் கொண்ட ஆய்வு கூடங்களுடனான எட்டு ஆராய்ச்சி பிரிவுகள், தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு, நான்கு மரபியல் வள நிலையங்கள்(விதைத் தோட்டங்கள்), ஏழு ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சேவை வழங்கும் பிரிவுகளுடனான ஒரு ஸ்தாபனமாக செயற்படுகிறது. இதற்கு மேலதிகமாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அக்கறையுடையவர்களுக்கு பல சேவைகளை வழங்குவதுடன் பல தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் தெங்குத்துறை முயற்சியாளர்களுக்கு தொழினுட்பங்களை உருவாக்குவதற்கும் பரப்புவதற்காகவும் மிக நெருக்கமாகவும் ஒன்றிணைந்தும் பணியாற்றுகிறது. தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயற்றிட்டங்களை தேசிய முன்னுரிமைகளுடன் ஒன்றிப்பதாக நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புத்தாக்கமுடைய, நல்ல கல்வியறிவினை கொண்ட, சிறந்த அனுபவமுள்ள, அர்ப்பணிப்புடைய ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் பிரதான பலமாக காணப்படுகின்றனர். இந்த அறிவு கொண்ட குழாமின் காரணமாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச பயிற்சி நிறுவனமாக சர்வதேச தென்னை சம்மேளத்தினால் அங்கீகரிக்கப்படுகிறது.
பல வழிகளில் தெங்குத் துறைக்கான எமது பங்களிப்பினை இந்த இணையத்தளம் எடுத்துக் காட்டுகிறது. இந்த இணையத்தளம் கருத்தினை பரிமாறுவதாகவும் வாசிக்கின்ற ஒவ்வொருவரும் இதனை இரசிப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன். இறுதியாக இந்த இணையதளத்தின் தொடர்ச்சியான விருத்திக்கான பின்னூட்டல்களை பெறுவதற்காக நாம் காத்திருக்கின்றோம்.