தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஈட்டியுள்ள தங்க விருது
அரச துறையின் சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்கீடு ஆகியவற்றுக்கான உயர்தர நிதியியல் அறிக்கையிடலின் அங்கீகாரத்திற்கான 2022 ஆம் ஆண்டின் தங்க விருதினை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் வென்றெடுத்துள்ளது.
திறைசேரியின் செயலாளர் திரு. மகிந்த சிறிவர்தன, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கலாநிதி. பிரியந்த மாயாதுன்னே, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க, CA இலங்கையின் தலைவர். திரு.சஞ்சய பண்டார, APFASL இன் தலைவர் திரு. வீ. கனகசபாபதி, CA இலங்கையின் துணைத் தலைவர் திரு. ஹேஷன குருப்பு, மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி. துலானி பெர்னாண்டோ ஆகியோரின் கௌரவ அனுசரணையின் கீழ் இந்த நிகழ்வு 2022 டிசம்பர் 2 ஆம் திகதி BMICH இல் நடைபெற்றது.
தென்னை ஆராய்ச்சி சபையின் தவிசாளர் திரு.மல்ராஜ் பீரிஸ், தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி. சனாதனி ரணசிங்க, பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி I) கலாநிதி. நயனி ஆராச்சிகே, பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி II) கலாநிதி சரத் இதிரிசிங்க, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.லயனல் குருப்பு முகாமையாளர் (தோட்டம்) திரு.பாரத லியனகே மற்றும் கணக்காளர் திருமதி. சந்தமாலி புலத்சிங்கள ஆகியோர் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பான இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.