2021 ஆம் ஆண்டுக்கான தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவன – சர்வதேச தென்னை சம்மேளன சான்றிதழ் கற்கைநெறி
2021 ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் திகதி வரையில் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தென்னை ஆராய்ச்சி நிறுவன – சர்வதேச தென்னை சம்மேளனத்தின் சான்றிதழ் கற்கைநெறி-2021 இனை மூன்றாவது முறையாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக நடாத்தியது. தென்னை விரிவாக்க உத்தியோகத்தர்கள், தென்னை செய்கையாளர்கள் மற்றும் தென்னை வளரும் நாடுகளின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு முறையாக தென்னை பயிர்ச்செய்கை மற்றும் தென்னை சார்ந்த பதனீட்டு தொழினுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக சர்வதேச தென்னை சம்மேளனத்துடன் இணைந்து தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த சான்றுதழ் கற்கைநெறி ஒழுங்குபடுத்தப்பட்டது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடாத்தப்பட்ட முதல் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட உயர்ந்த அளவிலான நேர்மறையான பின்னூட்டல்களின் அடிப்படையில் மூன்றாவது முறையாக இந்த கற்கைநெறியினை நாடாத்துவதற்கு தென்னை ஆராய்ச்சி நிறுவனமானது சர்வதேச தென்னை சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்பட்டது. கொவிட் -19 நோய்ப் பரவல் நிலை காரணமாக 2020 ஆம் ஆண்டில் இந்த வருடாந்த நிகழ்வின் தொடர்ச்சியில் தடையேற்பட்டது. ஆனால் சர்வதேச தென்னை சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் இந்த ஆண்டு பயிற்சி கற்கை நிகழ்வு செயன்முறை சார்ந்த கூறுகள் தவிர்க்கப்பட்டு நடாத்தப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் 19 (பபுவா நியூகினி, மிக்ரோனேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிஜி, கென்யா, கயானா, சமோவா, சொல்மன் தீவுகள், வியட்நாம், கம்போடியா, இந்தியா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, ரின்டாட், சுரினம், கிரெனடா, பெலிஸ், மற்றும் நியூ கலிடோலியா) நாடுகளை சேர்ந்த 38 பங்கேற்பாளர்கள் முறையாக தென்னை பயிர்ச்செய்கை மற்றும் தென்னை சார்ந்த பதனீட்டு தொழினுட்பங்கள் தொடர்பில் வெற்றிகரமாக பயிற்றப்பட்டனர்.

பிரிவு
செய்திகள்
நிகழ்ச்சிகள்