loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

விவசாய பொருளியல் மற்றும் விவசாய வர்த்தக முகாமைத்துவப் பிரிவு

சமூகத்துடன் ஒன்றிணைந்த பொறுப்பினை பூர்த்தி செய்வதுடன் உலகளாவிய ரீதியில் நிலைத்திருக்கின்ற தெங்கு துறையினை பற்றி சமூக பொருளாதார அறிவினை விருத்தி செய்தல்.

பணிக்கூற்று

சமூக, பொருளாதார ரீதியில் நிலைத்திருக்கின்ற உலக தெங்குத்துறையின் மீது சமூக பொருளியல் ஆய்வுகளில் சிறந்து விளங்குவதனூடாக அறிவினை விருத்தி செய்தல்.

ஆராய்ச்சிப் பிரிவுகள

பயிராக்கவியல் பிரிவு

பயிர் பாதுகாப்புப் பிரிவு

பொருளியல் மற்றும் விவசாய வர்த்தகம

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

தாவர உடற்றொழிலியல் பிரிவு

தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு

மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு

இழைய வளர்ப்புப் பிரிவு

தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு

தற்கால ஆராய்ச்சிகள்

N
தேங்காய் விலையினை தீர்மானிப்பதில் பங்களிப்புச் செய்கின்ற காரணிகளை அடையாளம் காணல் மற்றும் எதிர்கால விலைகளுக்கான மாதிரியினை உருவாக்கல்(2018-2021).
N
உள்நாட்டு சமையல் எண்ணெய் நுகர்வு மற்றும் அதன் இயக்கம்(2018-2021)
N
நிச்சயமற்ற காலநிலைக்கு பாதிப்படையக்கூடிய வீட்டுத் தோட்ட தென்னைகள் மற்றும் அவற்றின் உற்பத்தியின் தாக்கம் (2019 - 2021)
N
தென்னை பதனீர் சார்ந்த உற்பத்திகள் மற்றும் அதன் பெறுமதி சங்கிலி
N
தேங்காய் நார் துறையின் தொழிற்துறை அமைப்பு மற்றும் சந்தை அமைப்பு (2019 – 2021)
N
தெங்கு சார் பெறுமதி சங்கிலியினை இழிவளவாக்குவதற்கு தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தினை பயன்படுத்தல்.(2019-2021)
N
தேங்காய்ப் பால், தேங்காய்ப் பால் மா மற்றும் தேங்காய் கிறீம் ஆகியவற்றின் பெறுமதி சங்கிலிப் பகுப்பாய்வு (2020-2021)
N
ஏசிரியா சிற்றுண்ணியை கட்டுப்படுத்த விடுவிக்கப்படுகின்ற இரைகௌவி சிற்றுண்ணியின் தாக்கத்தை மதிப்பிடல் (2018-2021)
N
இலங்கையின் மீள் நடுகை செயல்திட்டங்களின் செயல்திறன் இன்மையினை கண்டறிவதற்கும் அதனை இழிவளவாக்குவதற்கும் செயல்திட்டங்களின் வெற்றியினை மதிப்பிடுதல். (2018 – 2021)
N
தென்னை வளரும் பிரதேசங்களின் தென்னை செய்கையின் கிரயமிடல். (ஒவ்வொரு வருடமும் தொடரப்படுகிறது)
N
பிராந்திய மற்றும் தேசிய தேங்காய் உற்பத்தியின் எதிர்வு கூறல்.
N
தேசிய தேங்காய் உற்பத்தியின் கணக்கீடு
N
தெங்கு சார் உற்பத்தி பொருட்களின் தரவேற்றத்திற்கான கைத்தொலைபேசி செயலி உருவாக்கம்.
N
தெங்கு சார் புள்ளிவிபரவியல் சேகரிப்பு மற்றும் ஒப்பிடல்(ஒவ்வொரு வருடமும் தொடரப்படுகிறது)

பிரதான கொள்கை பரிந்துரைகள்

2016

N

பதிலீட்டு சமையல் எண்ணெய்களின் மீதான சுங்க வரி

N
அனைத்து தொழிற்துறைகளையும் சமப்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்க்கான சுங்க வரி சரிசெய்யப்பட்டது. ஆகவே பண்படுத்தப்படாத பாம் எண்ணை கிலோகிராம் ஒன்றிற்கான விஷேட பண்ட வரி ரூ. 100 இலிருந்து ரூ. 130 என்ற அளவிலும் பாம் திண்ம வித்தகவிழையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரி ரூ. 130 இலிருந்து ரூ. 150 என்ற அளவிற்கும் திருத்தம் செய்யப்படுவதற்கு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்தது.
N
புதுத் தேங்காய் ஏற்றுமதியினை ஊக்குவிப்பதற்கு சிறிய அளவிலான புதுத் தேங்காய் ஏற்றுமதியாளர்களுக்கான (மாதாந்த ஏற்றுமதி குறைந்தது 30,000 தேங்காய்கள்) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பதிவுக் கட்டணத்தினை ரூ. 50,000 ஆக குறைத்தல் மற்றும் அனைத்து ஏற்றுமதியாளர்களினால் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்தப்படுகின்ற மொத்;த கையாளுகைக் கட்டணத்தினை நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

2017

N

கொப்பறா இறக்குமதி

N
சாதாரண வரியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கொப்பறாவினை பயன்படுத்தி தேங்காய் உற்பத்தி செய்வது சாத்தியமான வியாபாரமொன்றல்ல என நிதி பகுப்பாய்வு காட்டுகிறது. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட கொப்பறா மற்றும் அதிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய் ஆகியவற்றின் தரம் பற்றி அறியப்படவில்லை. உலர்த்தப்பட்ட தேங்காய் மற்றும் சமையல் எண்ணை இறக்குமதி போதான சேமிப்பு மற்றும் கொப்பறா இறக்குமதி செய்யப்பட முன் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் தேறிய வெளிநாட்டு நாணய மாற்று விதத்தில் ஏற்படுகின்ற அதிகரிப்பானது கருத்தில் கொள்ளப்படுதல் அவசியமானதாகும். கொப்பறா ஏற்றுமதியானது தொழிற்துறை பாவனைக்கான தேங்காயின் இடைவெளியினை நிரப்புகின்ற பொழுதிலும் உள்நாட்டு தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியனவற்றின் விலைகள், புதிதான பீடை மற்றும் நோய்களின் வருகையினால் ஏற்படுகின்ற அதிகமான ஆபத்து மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று செலவு ஆகியனவற்றில் குறிப்பிடத்தக்களவவு பாதகமான விளைவினை ஏற்படுத்துகிறது. கொப்பறா இறக்குமதியானது பொருத்தமற்றதாக காணப்படுவதுடன் தெங்குத் துறையின் வளர்ச்சிக்கு சாத்தியமற்றதெனவும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைக்கின்றது.
N
புதுத் தேங்காய் இறக்குமதி
N
தேங்காயின் ஏற்றுமதி தெங்கு தொழிற்துறை பாவனைக்காக தேவைப்படுகின்ற இடைவெளியினை நிரப்புகின்ற பொழுதிலும் பீடை மற்றும் நோய்கள் என்பன புதிதாக அறிமுகமாவதற்கான சாத்தியம் காணப்படுவதாலும் தனிமைப்படுத்தல் நிபந்தனைகளுக்கு உடன்படுவதால் இது விரும்பத்தக்க ஒன்றல்ல. ஆகவே தென்னை ஆராய்ச்சி நிறுவனம் இறக்குமதியினை தடை செய்வதற்கு பரிந்துரைக்கின்றது.

2018

N
புதுத் தேங்காய் ஏற்றுமதி
N
தெங்கு பதனீட்டாளார்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சு 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து புதுத் தேங்காய் ஏற்றுமதியினை தடை செய்ய தீர்மானித்தது. இந்த தீர்மானமானது 2018 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வரை தொடரப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் தடை நீக்கப்பட்டது. புதுத் தேங்காய் ஏற்றுமதி ஊக்குவிப்பினை தவிர தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் சேகரிக்கப்படுகின்ற சேவைக் கட்டணம் ரூ. 15 இலிருந்து ரூ. 8 ஆக குறைக்கப்பட்டது.
N
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் வித்தகவிழையத்துக்கான விஷேட பண்ட வரி
N
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் திண்ம வித்தகவிழையம் கிலோகிராம் ஒன்றிற்கான விஷேட பண்ட வரி ரூ. 1 ஆக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கும் வரும் வகையில் பின்பற்றப்பட்டது.
N
சமையல் எண்ணெய் இறக்குமதி மற்றும் புதுத் தேங்காய் விலைகளுக்கான சுங்க வரி அமைப்பு
N
அனைத்து தொழிற்துறைகளையும் சமப்படுத்துவதற்காவும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்காகவும் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி சரிசெய்யப்பட வேண்டும். ஆகவே இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணையின் செலவு, காப்புறுதி மற்றும் சரக்கு விலையினை கருத்தில் கொண்டு பண்படுத்தப்படாத பாம் எண்ணை கிலோகிராம் ஒன்றிற்கான விஷேட பண்ட வரி ரூ. 130 இலிருந்து ரூ. 175 என்ற அளவிலும் பாம் திண்ம வித்தகவிழையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரி ரூ. 150 இலிருந்து ரூ. 175 என்ற அளவிற்கும் திருத்தம் செய்யப்படுவதற்கு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்தது.
N
புதுத் தேங்காய் ஏற்றுமதியினை ஊக்குவித்தல்
N
சந்தையில் போதுமான அளவுக்கு அதிகமாக தேங்காய் காணப்படுவதினால் புதுத் தேங்காய் ஏற்றுமதிக்கான தடையை உடனடியாக நீக்கல்.
N
சிறிய அளவிலான புதுத் தேங்காய் ஏற்றுமதியாளர்களுக்கான (மாதாந்த ஏற்றுமதி குறைந்தது 30,000 தேங்காய்கள்) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பதிவுக் கட்டணத்தினை ரூ. 50,000 ஆக குறைத்தல்.
N
அனைத்து ஏற்றுமதியாளர்களினால் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்தப்படுகின்ற மொத்த கையாளுகைக் கட்டணத்தினை நீக்கல்.
N
உலர்த்தப்பட்ட தேங்காய் உற்பத்தி செயன்முறையினை தொடர்வதற்கான உற்பத்தியாளர்களுக்கு நஷ்ட ஈடு திட்டங்களை ஆரம்பித்தல்.
N
மாறுகின்ற பொருளியல் சேவைக் கட்டணங்கள்
N
தேங்காய் மற்றும் தெங்கு சார் உற்பத்தி பொருட்களின் உலக சந்தையின் பங்களிப்பு 20% இற்கு குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே இந்த உற்பத்தி பொருட்களுக்கான பொருளியல் சேவைக் கட்டணங்களை நீக்குவது இலங்கைக்கு சாதகமாக அமைகிறது. குறித்தளவு தெங்கு சார் உற்பத்திகள் சர்வதேச வர்த்தகத்தில் உயர் பங்களிப்பினை வழங்கி வருகின்றவதுடன் இந்த சர்வதேச வர்த்தகமானது உள்நாட்டு வரி அமுல்படுத்தலிருந்து அதிகரிக்கப்பட முடியும். ஆனால் நாட்டில் நட்டத்தின் ஆதாயம் வெளிநாட்டு நுகர்வோரினால் செலுத்தப்படுகின்ற வரிகளை விட குறைவாக காணப்படும் போது இது நிகழ்கிறது. இல்லாதவிடத்து உள்நாட்டு வரி அமுலாக்கம் காரணமாக உற்பத்தியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழப்பதனால் உற்பத்தியாளர்கள் நஷ்டமடைகின்றனர். ஆகவே 2018 ஆம் ஆண்டிலிருந்து 3 வருட காலப்பகுதிக்கு தெங்கு சார் உற்பத்தி பொருட்களுக்கான பொருளியல் சேவைக் கட்டணத்தை நீக்குவது அனுகூலமானதாகும்.
N
தேங்காய் வித்தகவிழையம், பொச்சு நீக்கப்பட்ட தேங்காய் மற்றும் கொப்பறா இறக்குமதி
N
போதுமான அளவிலான தேங்காய்கள் பதனீடு மற்றும் நுகர்விற்காக கிடைக்கப் பெறுகின்ற போதிலும் மிகுதியாகவும் தேங்காய்கள் காணப்படுகின்றன. உறைநிலை திண்ம வித்தகவிழைய இறக்குமதியினை தடை செய்தல் மற்றும் சர்வதேச சந்தையில் உலர்த்தப்பட்ட தேங்காய்க்கான கேள்வியில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சிக்கான காரணங்கள் ஆராயப்பட்டன.

2019

N
இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி
N
அனைத்து தொழிற்துறைகளையூம் சமப்படுத்தவும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பினை ஊக்குவிக்கவும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்க்கான சுங்க வரி சரிசெய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயின் செலவு, காப்புறுதி மற்றும் சரக்கு விலையினை கருத்தில் கொள்ளும் போது பண்படுத்தப்படாத பாம் எண்ணெயின் விஷேட சரக்கு தீர்வை ரூ. 130 இலிருந்து ரூ.175 அளவிற்கும் பாம் வித்தகவிழையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெய் ஆகியனவற்றின் விஷேட சரக்கு தீர்வையினை ரூ. 150 இலிருந்து ரூ.200 அளவிற்கும் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
N
நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள்
N
மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை கருத்திற் கொண்டு பண்படுத்தப்படாத பாம் எண்ணெய் கிலோ ஒன்றிற்கான விஷேட சரக்கு தீர்வையினை ரூ. 130 இலிருந்து ரூ.175 அளவிற்கும் பாம் வித்தகவிழையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெய் ஆகியனவற்றின் விஷேட சரக்கு தீர்வையினை ரூ. 150 இலிருந்து ரூ.195 அளவிற்கும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்ட பாம் எண்ணெயின் விஷேட சரக்கு தீர்வையினை ரூ. 155 இலிருந்து ரூ.200 அளவிற்கும் அரசு திருத்தம் மேற்கொண்டது.
N
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான ஒதுக்கீடு
N
அனைத்து சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளர்களை பதிவு செய்தல் மற்றும் தொழில்துறை மற்றும் நாட்டிலுள்ள சமையல் எண்ணெய் தேவைப்பாட்டினை கருத்தில் கொண்டு பங்கு ஒதுக்கப்பட்டுகிறது.
N
தேங்காய் ஏற்றுமதி
N
தேங்காய் ஏற்றுமதியினை ஊக்குவிப்பதற்கு தேங்காய் ஏற்றுமதியின் அனைத்து சுங்க வரியல்லா கட்டுபாடுகளை நீக்கல். சிறிய அளவிலான தேங்காய் ஏற்றுமதியாளர்களுக்கான தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பதிவுக் கட்டணத்தினை ரூ. 50,000 ஆக குறைத்தல் மற்றும் அனைத்து ஏற்றுமதியாளர்களினால் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்தப்படுகின்ற மொத்த கையாளுகைக் கட்டணத்தினை நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

2020

N
தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்கான கொப்பறா இறக்குமதி
N
கொப்பறா ஏற்றுமதி தொழிற்துறை பாவனைக்கான தேங்காயின் இடைவெளியினை நிரப்புகின்ற பொழுதிலும் உள்நாட்டு தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியனவற்றின் விலை, புதிதான பீடை மற்றும் நோய்களின் வருகையினால் ஏற்படுகின்ற அதிகமான ஆபத்து மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று செலவு ஆகியனவற்றில் குறிப்பிடத்தக்களவு பாதகமான விளைவினை ஏற்படுத்துகிறது. கொப்பறா இறக்குமதியானது பொருத்தமற்றதாக காணப்படுவதுடன் தெங்குத் துறையின் வளர்ச்சிக்கு சாத்தியமற்றதெனவும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைக்கின்றது.

அலுவலர்கள்

ஆராய்ச்சி

திருமதி. கே. வி. என். என். ஜயலத்

பிரிவின் தலைவர் (பதில் கடமை)

தொழினுட்பம் சார் (ஆராய்ச்சி)

திரு. எம். ஏ. என். ஏ. குமார

தொழினுட்ப உத்தியோகத்தர்

செல்வி. ஏ. என். ரீ. பீ. அமரசேகர

தொழினுட்ப உத்தியோகத்தர்

ஆராய்ச்சி சாராத

திருமதி. எஸ். எம். ஏ. சிரந்தி

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

Ms. P.B Manamperi (6328)

முகாமைத்துவ உதவியாளர்

இப்போது அழைக்கவும்

Skip to content