தென்னை ஆராய்ச்சி நிறுவனம்
இலங்கையின் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வரவேற்கிறோம்.
உலகில் தென்னை ஆராய்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் முதல் ஆராய்ச்சி நிறுவனமான இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் 1929 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது ஆற்றல் மிகுந்த, உற்சாகமான, புத்தாக்க திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், தகுதி வாய்ந்த தொழினுட்ப ஊழியர்கள் கொண்ட குழுவொன்றினையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு துணை புரிகின்ற நவீன பகுப்பாய்வு வசதிகளையும் கொண்டு காணப்படுகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடுவது தவிர்ந்து தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தென்னை சார்ந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலான அறிவினை தொழில்துறையின் அக்கறையுடையவர்களுக்கு பரப்புகிறது. ஏனைய சர்வதேச, தேசிய மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்த ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் ஊக்குவிக்கிறது. இந்நிறுவனம் 11 ஆராய்ச்சி பிரிவுகளையும் 5 சேவை வழங்கும் பிரிவுகளையும் கொண்டிருக்கிறது.
தூர நோக்கு
தெங்கு ஆராய்ச்சி, தொழினுட்ப விருத்தி மற்றும் இந்த பிராந்தியத்திற்கான தொழினுட்ப பரிமாற்றல் ஆகியனவற்றில் சிறந்து விளங்கும் மத்திய நிலையமாக திகழ்தல்.
பணிக்கூற்று
தென்னையின் உற்பத்தி மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதன் மூலம் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
நிறுவனம்
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆற்றல் மிகுந்த, உற்சாகமான மற்றும் புத்தாக்க திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், தகுதி வாய்ந்த தொழினுட்ப ஊழியர்கள் கொண்ட குழுவொன்றினையும் மூலப்பொருள் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு துணை புரிகின்ற நவீன பகுப்பாய்வு வசதிகள் கொண்டு காணப்படுகிறது. ஏனைய தேசிய நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார் நிறுவனங்களுடன் இணைந்த ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் ஊக்குவிக்கிறது. இந்நிறுவனம் ஏழு ஆராய்ச்சி பிரிவுகள் மற்றும் ஐந்து சேவை வழங்கும் பிரிவுகளை கொண்டிருக்கிறது.
Coconut Development Act, No. 46 of 1971
Download here
சமீபத்திய செய்திகள் & நிகழ்வுகள்
தெங்குத் துறையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய சுபாரதி வானொலி நிகழ்ச்சி
ஆராய்ச்சிப் பிரிவுகள்
பயிராக்கவியல் பிரிவு
பேண்தகு அடிப்படையில் தென்னந்தோட்டங்களின் உற்பத்தியினை அதிகரித்தல் மற்றும் பொருத்தமான தொழினுட்ப வளர்ச்சியின் ஊடாக தென்னை செய்கையினது இலாபத்தினை அதிகரித்தல்
பயிர் பாதுகாப்புப் பிரிவு
செவ்வண்டு கட்டுப்பாட்டுக்கான பெரமோன் குப்பிக்களின் தொகுப்பு மற்றும் அதன் விநியோகம்
பொருளியல் மற்றும் விவசாய வணிக முகாமைத்துவப் பிரிவு
தெங்குத் துறையின் சவால்களை எதிர்கொள்ள விவசாய பொருளாதாரம் மற்றும் விவசாய வணிக முகாமைத்துவ அறிவை உருவாக்கல்.
மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு
உயிருக்குரிய தகைப்பு மற்றும் உயிரிலித் தகைப்பு ஆகியவற்றுக்கு பெரியளவில் தாக்குப்பிடிக்கக்கூடியதும் அதிகளவான விளைச்சலை தரும் திறன் கொண்ட இனங்களை உருவாக்கி தெங்குச் செய்கையாளர்களுக்கு வழங்கல்.
தாவர உடற்றொழிலியல் பிரிவு
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் பங்குதாரர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் தகவல்களை வழங்குதல்.
தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு
தெங்கு உற்பத்திப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தென்னையிலிருந்து பெறப்படுகின்ற வருமானத்தை அதிகரிப்பதே தெங்குப் பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவின் பணியாகும்.
மண் மற்றும் தாவர போசணைப் பிரிவு
சேதன மற்றும் அசேதன உரப் பயன்பாட்டின் மூலம் தென்னை மற்றும் தென்னை சார் ஏனைய பயிர்களின் போசணை நிலையை பராமரிப்பதற்கான செலவு குறைந்த தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
இழைய வளர்ப்புப் பிரிவு
முளைய வளர்ப்பு செய்யப்பட்ட டீகிரி தென்னங்கன்றுகளை பெயரளவு விகிதத்தில் செய்கையாளர்களுக்கு வழங்கல்.
தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு
வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் பங்குதாரர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களிடையே பயனுள்ள தொடர்புகளை உருவாக்குங்கள்.
நூலகம்
பயனுள்ள ஒன்றை வழங்குவதன் மூலம் நிறுவன இலக்குகளை அடைய ஆதரவு.
Research Innovations
எங்கள் சேவைகள்
பகுப்பாய்வு சேவைகள்
The CRISL owns well equipped laboratories to analyze your samples i.e Soil, Irrigation water, Plant, and Coconut based food products, and fiber. We issue Differntial Fertilizer Recommendation (DFR) reports for your valued cultivation.
தரச் சான்றளித்தல்
CRISL ஆனது தென்னை நார் பித் ஏற்றுமதி செய்வதற்கும், தனியார் மற்றும் அரசு நர்சரிகளின் தென்னை நாற்றுகளுக்கு சான்றளிப்பதற்கும் சான்றிதழ்களை வழங்குகிறது.
நடவுப் பொருட்களை வழங்குதல்
CRISL ஆனது வீட்டுத் தோட்டங்களுக்கு கலப்பின நாற்றுகளையும், CRISL60 பெரிய அளவிலான தோட்டங்களுக்கு எங்கள் விதைத் தோட்டங்களிலும் உற்பத்தி செய்கிறது. நாங்கள் பிளஸ் பனை தேர்வு மற்றும் தனியார் நாற்றங்கால் பதிவு சேவை.
பூச்சி மற்றும் நோய் பரவல் மேலாண்மை
தென்னையில் திடீரென ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த CRISL உங்களுக்கு உதவுகிறது. கூடுதலாக, பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரமோன்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் கொள்ளைப் பூச்சிகளை வழங்குகிறோம்.
பயிற்சி சேவைகள்
CRISL ஆனது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பள்ளி குழந்தைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய பல்வேறு பயிற்சி திட்டங்களை நடத்துகிறது.
அறிவுரைச் சேவைகள்
விருதுகள் மற்றும் சான்றிதழ்கள்
மண் மற்றும் நிலம் பொருந்தக்கூடிய வரைபடங்கள்
கப்றுக கையேடு பதிவிறக்க
கப்றுக வீடியோ தொகுப்பு
சேவை விண்ணப்பம்
පුහුණු වැඩසටහන්
තත්ත්ව සහතික නිකුත් කිරීම
බීජ හා රෝපණ ද්රව්ය සැපයීම
විශ්ලේෂණ සේවා
රෝග හා පළිබෝධ කළමනාකරණය
උපදේශාත්මක සේවා