சர்வதேச தென்னை சம்மேளனத்தின் (ICC) பிரதிநிதிகளின் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவன விஜயம்
சர்வதேச தென்னை சம்மேளனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. ஜெல்ஃபினா சீ. அலவ் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி. மிர்துலா கொடேகேட் ஆகியோர் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று விஜயம் செய்தனர்.
இலங்கையின் தெங்குத் துறையின் தற்போதைய நிலை, தென்னைத் துறையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையின் தாக்கங்களை அடையாளம் காணல் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச தென்னை சம்மேளனம் ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய வேலைத்திட்டங்களின் தேர்ச்சி குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது தென்னைத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேச தென்னை சம்மேளனம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் தேவையான வசதிகள் மற்றும் ஆதரவைப் பற்றி கலந்துரையாடுவதற்கு மேலதிக செயலாளர் திருமதி. டி.எஸ்.விஜேசேகர , பணிப்பாளர் (கொள்கை மற்றும் செயற்பாடு) திருமதி சுரேகா அத்தநாயக்க, பெருந்தோட்ட அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி கே.எம்.பி.டி கருணாசேன தென்னை ஆராய்ச்சி சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி. சாரங்க அழகப்பெரும, தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் (பதில் கடமை)கலாநிதி.லலித் பெரேரா மற்றும் ஏனைய தென்னை ஆராய்ச்சி நிறுவன உத்தியோகத்தர்கள், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் திரு. கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க , பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) திரு. சம்பத் சமரவிக்ரம, பணிப்பாளர் (செயற்பாட்டு அபிவிருத்தி) திரு. பீ. எதிரிமான்னே, தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் (பயிற்சி) திரு டபிள்யூ. எம். ரத்நாயக்க ஆகியோேர் தென்னை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் கூடியிருந்தார்கள்.
