loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

சமீபத்திய பரிந்துரை

புதிய இனமொன்றின் அறிமுகம்

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

இலங்கையின் தேசிய மீள்நடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்காக முந்திய பூவுருவாதல் மற்றும் அதிக விளைச்சலினை கொண்ட புதிய கலப்பின தென்னைகளை உருவாக்குவதை நோக்காக கொண்டு உறுதியான மூன்று வெளிநாட்டு இரகங்களான; மலையன் சிவப்பு குட்டை, ரெனெல் தீவு நெட்டை மற்றும் தக்கணன் நெட்டை ஆகியனவற்றின் இறக்குமதி செய்யப்பட்ட மகரந்த மணிகளுடன் புதிய கலப்பு பிறப்பாக்க நிகழ்ச்சித்திட்டமொன்றினை 2006 ஆம் ஆண்டில் மரபியல் மற்றும் தாவர இனவிருத்தி பிரிவு ஆரம்பித்தது. இந்த வெளிநாட்டு தென்னை இரகங்கள் இலங்கை நெட்டை மற்றும் இலங்கை பச்சைக் குட்டை இனங்களுடனான வேறுபட்ட சேர்மானங்களான கலப்புப் பிறப்பாக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட கலப்பினங்கள் 2008 ஆம் ஆண்டில் களத்தில் நடப்பட்டன. 12 ஆண்டுகளாக பல இடங்களின் மேற்கொள்ளப்பட்ட முந்திய தாவர வளர்ச்சி, பூவுருவாதல் மற்றும் தேங்காய் விளைச்சல் ஆகியனவற்றின் மதிப்பீடுகள் இலங்கை நெட்டை × மலையன் சிவப்புக் குட்டை (TxMRD) இன் புதிய தென்னை கலப்பினத்தின் உயா் ஆற்றலினை வெளிப்படுத்துகின்றன. ஆகவே 2020 ஆம் ஆண்டின் தேசிய தென்னை மீள் நடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்காக இலங்கை நெட்டை × மலையன் சிவப்புக் குட்டை (T x MRD) இனது புதிய தென்னை கலப்பினம் சீ. ஆர். ஐ. எஸ். எல். 2020 ஆக 2020 ஆம் ஆண்டின் செம்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டது. இந்த புதிய கலப்பினமானது வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கும் வீட்டுத்தோட்டங்களுக்கும் பொருத்தமானதாக அமையும். இதன் கை மகரந்தச் சேர்க்கை நிகழ்ச்சித்திட்டம் அம்பகலே விதைத் தோட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. 2020 செப்டம்பர் இருந்து கன்றுகள் தெங்குச் செய்கையாளர்களுக்கு கிடைக்ககூடியதான இருக்கும். சீ. ஆர். ஐ. எஸ். எல். 2020 இன் வறட்சி மற்றும் தென்னை சிற்றுண்ணிகளை தாங்கக்கூடிய தன்மை ஆகியனவற்றின் மதிப்பீட்டுக்காக மேலதிக ஆய்வுகள் தொடரப்படுகின்றன.

சீ. ஆர். ஐ. எஸ். எல் 98 (CRISL 98) தொடர்பான பரிந்துரையின் திருத்தம்

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

இலங்கையின் தென்னை வளரும் அனைத்து இடங்களிலும் நடுகை செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட தென்னை ரகமான சீ. ஆர். ஐ. எஸ். எல். 98 கலப்பினம் தேசிய தென்னை மீள்நடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்காக 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பல்வேறு சூழல், முகாமைத்துவ நிபந்தனைகளின் கீழ் சீ. ஆர். ஐ. எஸ். எல். 98 இனது செயல்திறன் தொடர்பான பரந்த புரிதலுக்காக கலப்பின வெளியீடப்பட்ட போது 100 இற்கும் அதிகமான விவசாய கள விளங்கப்படுத்தல் தளங்கள் வெவ்வேறுபட்ட விவசாய சூழலியல் வலயங்களில் நிறுவப்பட்டன.
உலர் வலய, ஈர வலய மற்றும் இடைவெப்ப வலயங்களின் தெரிவு செய்யப்பட்ட தளங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அண்மைக்கால அவதானிப்புக்கள் சீ. ஆர். ஐ. எஸ். எல். 98 இன் செயல்திறன் உலர் வலயத்தினை விட ஈர மற்றும் இடை வெப்ப வலயங்களில் நன்றாக இருப்பதாக வெளியிடுகின்றன. இதற்கு மேலதிகமாக உலர் வலயத்தின் நீடித்த வறட்சிக் காலங்களில் சீ. ஆர். ஐ. எஸ். எல். 98 தென்னைகளால் அவற்றினது வளர்ச்சி பேணப்பதுடன் அவற்றில் காய் உருவாதல் இடம்பெறுவதில்லை. ஆகவே தென்னை வளரும் அனைத்து இடங்களிலும் நடுகை செய்வதற்கான ரகம் என்ற சீ. ஆர். ஐ. எஸ். எல். 98 இன் முன்னைய பரிந்துரையானது இலங்கையின் ஈர மற்றும் இடைவெப்ப வலயங்களின் நடுகைக்கு மாத்திரம் என திருத்தம் செய்யப்பட்டது.

வெலிகம தென்னோலை வாடல் நோய்த் தாக்கத்திற்குட்பட்ட தென்னை மரங்களை அழிக்ககூடிய இரசாயனம்

பயிராக்கவியல் பிரிவு

வெலிகம தென்னோலை வாடல் நோய்த் தாக்கத்திற்குட்பட்ட தென்னைகளில் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பிலான மதிப்பீட்டில் வெற்றியளித்துள்ளதாக இரசாயனமொன்று (குளுபோசினேற் அமோனியம்) அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை வெளியிடப்பட்டு தற்போது தென் மாகாணத்தின் நோய் பாதிப்புக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட தென்னைகள் இந்த முறையில் அழிக்கப்படுவது நடைமுறையிலுள்ளது.
உடற்றொழியியல் செயன்முறைகளினை விரைவாக கட்டுப்படுத்தவும் முழுமையான தென்னையின் வட்டுப் பகுதியினை 2 வாரங்களில் அகற்றுவதற்கும் மரமொன்றுக்கு தலா 30 மில்லிலீற்றர் வீதம் உட்செலுத்தப்படுவது பரிந்துரைக்கப்படுகிறது.

கினிப்புல்லினை கட்டுப்படுத்துவதற்கான இடைக்கால பரிந்துரைகள்

பயிராக்கவியல் பிரிவு

தென்னந்தோட்டக் காணிகளில் பிரச்சினைக்குரிய கினிப்புல்லினை கட்டுப்படுத்த களைகொல்லி மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடைக்கால பரிந்துரையொன்று வழங்கப்பட்டது. முழுமையான பரிந்துரை 2020 ஆம் ஆண்டினுள் வழங்கப்படும்.

பள்ளம தோட்டத்தின் களைகொல்லி மதிப்பீடு
1. வளர்ந்த கினிப்புல்லுக்கான

100 மில்லிலீற்றர் குளுபோசினேற் அமோனியம் 16 லீற்றர் நீருடன் கலக்கப்பட வேண்டும் (நப்சக் தௌிகருவி தாங்கியொன்றுக்கானது). 1 ஏக்கருக்கு 8-10 தாங்கிகள் தௌிக்கப்பட வேண்டும்.

2. பூக்க முன்னரான வளர்ச்சியடையாத கினிப்புல்லுக்கான

80 மில்லிலீற்றர் குளுபோசினேற் அமோனியம் 16 லீற்றர் நீருடன் கலக்கப்பட வேண்டும் (1 நப்சக் தௌி கருவி தாங்கியொன்றுக்கானது). 1 ஏக்கருக்கு 8-10 தாங்கிகள் தௌிக்கப்பட வேண்டும்.

ஜெல் வடிவிலான செவ்வண்டு பெரமொன்

பயிர் பாதுகாப்புப் பிரிவு

2019 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து ஜெல் வடிவிலான செவ்வண்டு பெரமோனை பரப்பும் அமைப்பு செய்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பிரயோகம் ஏக்கருக்கு 2 பொறிகள் வீதமாகும். இந்தப் பொறிகள் கண்ணாடி வடிலிலான பெரமோன் பரப்பும் அமைப்பினை விட அதிகம் சிறைப்பிடிக்கின்றன. இதன் செயற்பாடு அண்ணளவாக 2 1⁄2 மாதங்களாகும்.

வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தல்

பயிர் பாதுகாப்புப் பிரிவு

தென்னையின் வெள்ளை ஈயினது உயா் குடித்தொகையினைக் கட்டுப்படுத்த பின்வரும் பூச்சி கொல்லிகள் விசிறப்படுவது இடைக்கால பரிந்துரையாக அளிக்கப்பட்டது.

  • 10 லீற்றர் நீரில் இட்டு கரைக்கப்பட்ட 3 கிராம் தையோமெதோசாம் .
  • 10 லீற்றர் நீரில் இட்டு கரைக்கப்பட்ட 20 மில்லி லீற்றர் கார்போசல்ஃபன்
  • 10 லீற்றர் நீரில் இட்டு கரைக்கப்பட்ட 2.5 கிராம் குளோரோன்ட்ரானிலிப்ரோல் + தியோமெதாக்சம்

இப்போது அழைக்கவும்

Skip to content