தென்னை ஆராய்ச்சி சபையின் புதிய தவிசாளராக திரு.மல்ராஜ் பீரிஸ் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்னை ஆராய்ச்சி சபையின் புதிய தவிசாளராக திரு.மல்ராஜ் பீரிஸ் அவர்கள் 31.10.2022 அன்று தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.அருந்திக பிரனாந்து, முன்னாள் வடமேற்கு மாகாண சபை அமைச்சர் திரு.சந்திய ராஜபக்ஷ, முன்னாள் வடமேற்கு மாகாண சபை உறுப்பினர் திரு. ரெவின் பிரனாந்து, வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் திரு.சுசந்த பெரேரா மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் திரு. மல்ராஜ் பீரிஸ் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டார். மேலும், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க, கித்துள் அபிவிருத்திச் சபையின் தவிசாளர் திரு. ஹிகான் ப்ரியநாத், தென்னை ஆராய்ச்சி சபை உறுப்பினர் திரு. லயனல் பொன்சேகா, தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி. லலித் பெரேரா, பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி I) – கலாநிதி. நயனி ஆரச்சிகே, பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி II) கலாநிதி. சரத் இதிரிசிங்க, பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு. லயனல் குருப்பு, சிரேஷ்ட கணக்காளர் – திரு. உபுல் சந்ரநாத் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.