அடுத்த இரு ஆண்டுகளில் தென்னையினை நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிராக உயர்த்துதல்
கௌரவ அமைச்சர் வைத்திய கலாநிதி. ரமேஷ் பத்திரண, கௌரவ இராஜாங்க அமைச்சர் அருந்திக பிரணாந்து, அமைச்சுப் பிரதிநிதிகள் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊழியர்களை வழிநடத்துகின்ற தென்னை ஆராய்ச்சி சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி. சாரங்க அழகபெரும ஆகியோரது பங்குபற்றுதலில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி மேற்குறிப்பிடப்பட்ட கருப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று செத்சிறிபாயவில் இடம்பெற்றது.
இந்த சிறப்பு கலந்துரையாடலில் அடுத்துவரும் இரு ஆண்டுகளுக்குள் மேலதிகமாக 1 பில்லியன் தேங்காய்களை கொண்டு தென்னை மற்றும் தென்னை சார்ந்த ஏற்றுமதி பொருட்களை அதிகரித்தலினை நோக்காக கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முடிவினை நோக்கிய முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டதுடன் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகளில் நாட்டின் முதலாம் நிலை ஏற்றுமதி பயிராக தென்னை இடம்பெறுவதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட உபாயங்கள் தேவைப்பட்டன. மான்புமிகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் நோக்குடன் ஒன்றிப்போவதாக பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் ஈடுபாட்டினை காண்பித்தனர். தேசத்தின் மேம்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கான எடுக்கப்பட்ட சில வரலாற்று தீர்மானங்களின் சுருக்கம் வருமாறு.
பிரிவு
செய்திகள்
நிகழ்ச்சிகள்
தென்னை அபிவிருத்தி தொடர்பிலான தேசிய கொள்கையொன்று உருவாக்கம்
கலப்பின தென்னையின் உற்பத்தயினை துரிதப்படுத்தல் மற்றும் குறைந்தது இரு கலப்பின தென்னை மரங்களை வீட்டுத்தோட்டங்களில் நடுவதற்கு மக்களை ஊக்கப்படுத்தல்
துரிதமான பரிந்துரைக்கப்பட்ட தென்னங்கன்றுகளின் உற்பத்தியின் முன்னோட்டமாக இழைய வளர்ப்பினை பயன்படுத்தல்
தேங்காய் அறுவடைக்கான உயர் தொழினுட்ப பொறிமுறை மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தல்
வீடுகளில் நுகர்வின் போதான வீண்விரயத்தினை குறைப்பதற்கான புதிய உற்பத்தி நடைமுறையினை சந்தைக்கு கொண்டுவரல்.
பிரதானமான பீடைகளான செவ்வண்டு, கரு வண்டு மற்றும் ஏனைய சேதம் உண்டாக்குகின்ற முலையூட்டிகளை தடுப்பதற்காக தொழிற்துறையின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த தேசிய அளவிலான நிகழ்ச்சித்திட்டம்
வெலிகம வாடல் நோயின் கட்டுப்படுத்தல் மற்றும் அதனை விரைவில் ஒழித்தல்.
புதிய நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், ஒரு பனை உற்பத்தியில் தற்போதைய கொட்டையை இரட்டிப்பாக்க போதுமான திறன் கொண்டது, அதே நேரத்தில் தென்னை விவசாயிகளை இயற்கையான தோட்டத்தில் ஊக்குவிக்கிறது.
மிகவும் முக்கியமாக “சிலோன் தென்னை” என்ற தர நாமத்தினை சர்வதேச அளவில் ஊக்குவிப்பதனை நோக்காக கொண்டு உத்தியோகபூர்வமான பிரச்சாரமொன்று ஆரம்பிக்கப்பட்டது.