இலங்கையின் சிறந்த அரசாங்க இணையத்தளமாக விளங்குகின்ற cri.gov.lk
LK டொமைன் ரெஜிஸ்ட்ரியால் நடாத்தப்பட்ட Bestweb.lk 2022 போட்டியில் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவன இணையத்தளம் இலங்கையின் ‘சிறந்த அரசாங்க இணையதளம்’ என பெயரிடப்பட்டது.
சிறந்த குடிமக்கள் சேவைக்கான இணையதளப் பிரிவில் வெள்ளி விருதை நாம் பெற்றுள்ளோம். இந்த ஆண்டு இந்த பிரிவில் CRISL மட்டுமே விருது பெற்றுள்ளதால் இந்த விருது தனித்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த போட்டியில் வெண்கல விருதை பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையில் உள்ள 500 சர்வதேச அளவிலான இணையத்தளங்களில் CRISL இந்த விருதை வென்றது. மேலும் இந்த பிரிவினில் விருதை வென்ற ஒரே அரசாங்க அமைப்பு CRI ஆகும். விருது வழங்கும் வைபவம் 2022, ஆகஸ்ட் 30 ஆம் திகதி அன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
